பாதுகாப்பு அமைச்சகம்
எல்லைக் கிராமங்கள்தான் நாட்டின் முதன்மை கிராமங்கள், தொலைதூரப் பகுதிகள் அல்ல; அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது: பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
11 SEP 2024 5:21PM by PIB Chennai
எல்லைப்புற கிராமங்களின் முழுமையான வளர்ச்சிக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முழு உறுதிப்பாட்டுடன் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இவை தொலைதூரப் பகுதிகள் அல்ல, நாட்டின் முதன்மை கிராமங்கள் என்று தெரிவித்துள்ளார். 2024, செப்டம்பர் 11 அன்று புதுதில்லியில் நடைபெற்ற எல்லைப் பகுதி மேம்பாட்டு மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவின் புவிசார் உத்திசார் நிலைப்பாடு பல்வேறு வகையான சவால்களுக்கு ஆளாகிறது என்றும், அவற்றைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி எல்லைப் பகுதி வளர்ச்சியை உறுதி செய்வதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளில் எல்லைப் பகுதி மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்த திரு ராஜ்நாத் சிங், "எல்லைப்புற சாலைகள் அமைப்பு 8,500 கி.மீ சாலைகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட நிரந்தர பாலங்களை அமைத்துள்ளது. உலகின் மிக உயரமான சுரங்கப் பாதையாக அமையவிருக்கும் அடல் சுரங்கப்பாதை, சேலா சுரங்கப்பாதை மற்றும் ஷிகுன்-லா சுரங்கப்பாதை எல்லைப் பகுதி வளர்ச்சியில் மைல்கற்களாக அமையும். லடாக்கின் எல்லைப் பகுதிகளை தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்காக 220 கிலோ வோல்ட் ஸ்ரீநகர்-லே மின்சார பாதையை எங்கள் அரசு தொடங்கியுள்ளது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் மின் பகிர்மானம் மற்றும் விநியோக உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அகன்ற அலைவரிசை பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அதிவேக இணையவழி சேவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 7,000 க்கும் மேற்பட்ட எல்லை கிராமங்கள் இணைய இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் எங்கள் கவனம் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் மீது உள்ளது.
சாலைகள் மற்றும் மின்சாரம் ஆகியவை அடிப்படை வசதிகள் என்று குறிப்பிட்ட பாதுகாப்புத் துறை, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053773
------------------
IR/RS/KV
(Release ID: 2054133)
Visitor Counter : 45