சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சிந்தனை அமர்வு 2024-ன் இரண்டாம் நாளில் சமூக அதிகாரமளித்தல் மற்றும் நலன் சார்ந்த முயற்சிகள் குறித்த முக்கிய விவாதங்களை எடுத்துக்காட்டியது
Posted On:
10 SEP 2024 7:56PM by PIB Chennai
சிந்தனை அமர்வு 2024-ன் இரண்டாவது நாளில், விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு, சமூக அதிகாரமளித்தல் மற்றும் நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முக்கியமான விவாதங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்/உயர் அதிகாரிகள், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் அன்றைய நடவடிக்கைகளை வழிநடத்தினார்.
சமூக அதிகாரமளித்தல் அமர்வு
உத்தரபிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளக்கங்களுடன் காலை அமர்வு தொடங்கியது. ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசங்களும் அந்தந்த சமூக அதிகாரமளித்தல் முயற்சிகள் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டன, சிறந்த நடைமுறைகள், புதுமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரிவினரை இலக்காகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டின.
விளக்கக்காட்சிகளின் போது கவனம் செலுத்தப்பட்ட முக்கிய பகுதிகள்:
1. பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபடுவோரின் விரிவான மறுவாழ்வு:
பிச்சை எடுப்பதில் ஈடுபடும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான உத்திகள் மற்றும் கொள்கைகள் பற்றிய கலந்துரையாடல், அவர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துதல்.
******
(Release ID: 2053546)
IR/RR/KR
(Release ID: 2053628)
Visitor Counter : 41