விவசாயத்துறை அமைச்சகம்
காரீஃப் 2024 பருப்பு உற்பத்தி கண்ணோட்டம் குறித்த முதலாவது பங்குதாரர் ஆலோசனையை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தொடங்கியுள்ளது
Posted On:
06 SEP 2024 5:59PM by PIB Chennai
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் திருமதி சுபா தாக்கூர் தலைமையில், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று பங்குதாரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2024, அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள காரீஃப் 2024 பருவத்திற்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிடுவதற்கு முன்னதாக, இதுபோன்ற விவாதம் ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்திய பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் சங்கம் (IPGA), இந்திய பருப்பு வகைகள் ஆராய்ச்சி நிறுவனம் (IIPR), நுகர்வோர் விவகாரங்கள் துறை (DOCA), சாமுன்னதி, அக்ரி பஜார் மற்றும் அக்ரிவாட்ச் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டு விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையின் முதன்மை நோக்கம், காரீஃப் 2024 பருவத்திற்கான தற்போதைய பருப்பு உற்பத்தி கண்ணோட்டம் குறித்து, பங்குதாரர்களிடமிருந்து முக்கியமான நுண்ணறிவுகள் மற்றும் ஆரம்ப மதிப்பீடுகளை சேகரிப்பதாகும். இந்த பங்களிப்புகள் முதல், முன்கூட்டிய மதிப்பீடுகளை உருவாக்குவதில் ஒருங்கிணைந்ததாக இருக்கும். கூட்டத்தின் போது, பங்கேற்பாளர்கள் பயிர் நிலை மதிப்பீடுகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மதிப்புமிக்க நிபுணத்துவத்தை பகிர்ந்து கொண்டனர். பங்குதாரர்கள் வழங்கிய ஆரம்பகட்ட களநிலவர அறிக்கைகளின்படி, துவரம் பருப்பு மற்றும் பாசிப்பயறு உற்பத்திக்கான பார்வை, வரவிருக்கும் பருவத்திற்கு நம்பிக்கைக்குரியது.
அமைச்சுக்கும் தொழில்துறை நிபுணர்களுக்கும் இடையில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் வழக்கமான தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை அனைத்து பங்குதாரர்களும் மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம் ஆலோசனை முடிவடைந்தது. பயிர் மதிப்பீடுகளின் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்கும், வேளாண் துறையில் உரிய நேரத்தில் தலையீடுகளை உறுதி செய்வதற்கும். இந்த கூட்டுறவு அணுகுமுறை அவசியமாகிறது. இந்த முயற்சி, பயிர் உற்பத்தி மதிப்பீடுகளில் மேம்பட்ட துல்லியத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
*****
MM/KPG/DL
(Release ID: 2052664)