உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
கோவை உட்பட 9 விமான நிலையங்களில் டிஜி யாத்திரை சேவை - மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தொடங்கிவைத்தார்
Posted On:
06 SEP 2024 5:57PM by PIB Chennai
விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில், ஒன்பது விமான நிலையங்களுக்கான டிஜி யாத்திரை வசதியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு இன்று தொடங்கி வைத்தார். கோயம்புத்தூர், தபோலிம், இந்தூர், பாக்டோக்ரா, ராஞ்சி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய எட்டு விமான நிலையங்களிலும் இந்த வசதியை மெய்நிகர் முறையில் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, விமான நிலைய கூட்டத்தை வழிநடத்தும் போது, போர்டிங் பாஸ், அடையாள அட்டை மற்றும் லக்கேஜ் டேக்குகள் போன்ற பல ஆவணங்களை நிர்வகிப்பதற்கான சிக்கலான பணியை, டிஜி யாத்ரா எவ்வாறு எளிதாக்குகிறது என்பதை, விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். ஒரு பயணிக்கான விமான நிலைய நுழைவு நேரம், சராசரியாக 15 வினாடிகளில் இருந்து 5 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. 55 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் ஏற்கனவே பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் 3 கோடிக்கும் அதிகமான பயணிகள், தங்கள் பயணத்திற்கு டிஜி யாத்ராவைப் பயன்படுத்தியுள்ளனர்.
டிசம்பர் 1, 2022 அன்று புதுடெல்லி, வாரணாசி மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று விமான நிலையங்களில், முதலில் டிஜி யாத்திரை வசதி தொடங்கப்பட்டதிலிருந்து, டிஜி யாத்திரை இயக்கப்பட்ட விமான நிலையங்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தி நான்காக இருக்கும்.
டிஜி யாத்ரா அறிமுகத்தின் முக்கியத்துவத்தை மேலும் விவரித்த அமைச்சர், "கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, உடல் தொடர்பைக் குறைக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அவசரமாக இருந்தபோது, அதன் அறிமுகம் சரியான நேரத்தில் இருந்தது. முக்கிய விமான நிலையங்களின் சோதனைச் சாவடிகளில், தொடர்பு இல்லாத மற்றும் காகிதமற்ற செயலாக்கத்தை டிஜி யாத்ரா வழங்கியது. அதன் தொடக்கத்திலிருந்து, இந்த அமைப்பு விமான நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான தாள்களை சேமிக்க உதவியது, இது விமானப் போக்குவரத்துத் துறையில் நிலையான வளர்ச்சியின் எங்கள் பரந்த இலக்கை ஆதரிக்கிறது.
தரவு பாதுகாப்பு பிரச்சினையில், திரு நாயுடு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார், "மக்களவையில் கூட, டிஜி யாத்ரா வலுவான தரவு பாதுகாப்பின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நான் வலியுறுத்தினேன். இன்றும், பயணிகளின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலின் (PII) மைய சேமிப்பு இல்லை என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன். அனைத்து பயணிகளின் தரவுகளும் குறியாக்கம் செய்யப்பட்டு, அவர்களின் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன, முதலில் புற்றப்படும் விமான நிலையத்துடன் தற்காலிகமாக மட்டுமே பகிரப்படுகின்றன. மேலும், புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அழிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பயணியின் தனியுரிமையும் எங்களுக்கு மிக முக்கியமானது, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதில் சமரசம் செய்யாது.
டிஜி யாத்ரா என்பது, முக அங்கீகார தொழில்நுட்பத்தின் (எஃப்ஆர்டி) அடிப்படையில், விமான நிலையங்களில் தடையற்ற, தொடர்பு இல்லாத மற்றும் காகிதமற்ற போர்டிங் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உருமாறும் டிஜிட்டல் முயற்சியாகும். பயணிகள் தங்கள் அடையாளம் மற்றும் பயண விவரங்களை சரிபார்க்க முக அம்சங்களைப் பயன்படுத்தி காகிதமற்ற மற்றும் தொடர்பு இல்லாத செயலாக்கத்தின் மூலம் விமான நிலையங்களில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல இது உதவுகிறது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் கூட்டுறவுத்துறை இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலர் திரு. வும்லுன்மாங் வுல்னாம் ஆகியோரும் காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் திரு எம் சுரேஷ், மக்களவை (விசாகப்பட்டினம்) உறுப்பினர் திரு ஸ்ரீபாரத் மதுகுமில்லி, ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் திரு பிஜிவிஆர் நாயுடு (காண பாபு), திரு பி.கே.தாக்கூர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
MM/KPG/DL
(Release ID: 2052663)
Visitor Counter : 61