தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு குறித்த பிராந்திய அளவிலான இரண்டாவது கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தலைமை வகித்தார்
Posted On:
06 SEP 2024 5:54PM by PIB Chennai
சண்டிகரில் இன்று நடைபெற்ற தொழிலாளர் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு குறித்த பிராந்திய அளவிலான இரண்டாவது கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தலைமை வகித்தார். பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், லடாக், சண்டிகர், ராஜஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தக் கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய அமைச்சர் 2047 வாக்கில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற தொழிலாளர் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம் என்றார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை விரிவான சமூகப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்த அமைச்சர், இதற்காக இ-ஷ்ரம் இணையப்பக்கம் தொடங்கப்பட்டிருப்பதாக கூறினார். இந்தப் பின்னணியில் ஊழியர் அரசு காப்பீட்டு கழகத்தின் சேவைகளையும், பயன்களையும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் பணியாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் திருமதி சுமிதா தாவ்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்தஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2052591
***
SMB/AG/DL
(Release ID: 2052660)
Visitor Counter : 29