விவசாயத்துறை அமைச்சகம்
தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார்
Posted On:
06 SEP 2024 5:48PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இரண்டு நாள் பயணமாக ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் சட்டமன்றத் தொகுதியின் கேசர்பள்ளிக்கு சென்றிருந்த திரு சவுகான், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் தெலங்கானாவின் மீனவலு, பெத்தகோபாவரம், மன்னூர், கட்லேரு ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை விமானம் மூலம் அமைச்சர் ஆய்வு செய்தார். கம்மம் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் விவாதித்தார். உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று திரு சவுகான் அவர்களிடம் கூறினார்.
"உங்கள் வலியைப் புரிந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி என்னை அனுப்பியுள்ளார், நீங்கள் உங்கள் பயிர்களை இழந்துவிட்டீர்கள், ஆனால் அவர் உங்கள் உயிரை இழக்க அவர் விட மாட்டார். நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன், எனது விவசாய சகோதரரின் வலியை என்னால் உணர முடிகிறது. நாங்கள் தகுந்த இழப்பீடு வழங்குவோம் என்று திரு சவுகான் தெரிவித்தார். நெருக்கடி காலங்களில் விவசாயிகளிடமிருந்து கடன்களை வசூலிக்க வேண்டாம் என்று வங்கிகளை கேட்போம். அடுத்த பயிருக்கான உரங்கள் மற்றும் விதைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், விவசாயிகளின் வாழ்க்கையை இயல்பாக்க மாநில அரசுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி அக்கறை கொண்டுள்ளதாக திரு சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய அரசின் பங்கையும் உள்ளடக்கிய மாநில பேரிடர் உதவி நிதிக்கு ரூ.3,448 கோடி உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2052584
***
SMB/AG/DL
(Release ID: 2052656)