சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் புதுதில்லியில் "சுகாதாரத்திற்கான உலகளாவிய அணுகல்: டிஜிட்டல் தீர்வுகள்" குறித்த தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார்

Posted On: 06 SEP 2024 12:22PM by PIB Chennai

நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் "அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல்: டிஜிட்டல் தீர்வுகள்" என்ற தேசிய மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி) பொதுச் செயலாளர் திரு பரத் லால் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நித்தி ஆயோக் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆதரவுடன், சங்கலா அறக்கட்டளையுடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், முன்னணி வல்லுநர்கள், புதுமையாளர்கள், சுகாதார மற்றும் டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பத் துறையில் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது, குறிப்பாக கிராமப்புறங்கள் தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்களுக்கு மலிவான மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய அணுகலுக்கான முன்னோக்கிய வழியை ஆராய வழி வகுத்துள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் வி.கே.பால், இந்தியாவில் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை எடுத்துரைத்தார். "பிற்காலத்தில் சுகாதாரப் பராமரிப்புச் சுமையைக் குறைக்க வலுவான ஆரம்ப சுகாதார அமைப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக இந்த வலையமைப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.

டாக்டர் பால் டிஜிட்டல் சுகாதார தீர்வுகளைத் தழுவுவதற்கான பின்வரும் ஐந்து முக்கிய கொள்கைகளை சுட்டிக்காட்டினார்:

டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றை செறிவூட்டலுக்காக அளவிடுதல்

ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, ஆனால் டிஜிட்டல் இடைவெளியை அதிகரிக்காத வகையிலும், டிஜிட்டல் கல்வியறிவு இல்லாதவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்கும்.

தீர்வுகள், உரிமைகளின் எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்தல் மற்றும் உள்ளடக்கம், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேலும் ஜனநாயகமயமாக்கலை ஊக்குவித்தல், இணைய மோசடிகளிலிருந்து பயனாளிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துதல்.

டிஜிட்டல் தீர்வுகள் எளிதான வாழ்க்கை சூழலை ஊக்குவிக்க வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும், அதை மக்களுக்கு மிகவும் சிக்கலானதாக மாற்றக்கூடாது.

டிஜிட்டல் தீர்வுகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும், நல்வாழ்வைத் தழுவ வேண்டும், பாரம்பரிய அறிவை உள்ளடக்கியிருக்க வேண்டும் மற்றும் நமது சுகாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

தேசிய டிஜிட்டல் இயக்கத்தின் இலக்குகளில் ஒன்று, சுகாதார சேவைகளின் பரவலை அதிகரிப்பது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை குறைப்பது என்று திரு அபூர்வ சந்திரா கூறினார்.

நாடு முழுவதும் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்க உதவிய கோவின் மற்றும் ஆரோக்கிம் சேது பயன்பாட்டின் வெற்றியை, மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் எடுத்துரைத்தார். அரசின் முன்னோடித் திட்டமான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் மூலமாகவும் இதே மாதிரியை செயல்படுத்த மத்திய அரசு விரும்புவதாக அவர் கூறினார். டெலிமெடிசின், டெலிமனாஸ், இராக்ட்கோஷ் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏற்கனவே பல இணையதளங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றை ஒரே இணையதளத்தில் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் எடுத்துரைத்தார்.

ஆண்டுதோறும் 3 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் தாய்மார்கள் மற்றும் கிட்டத்தட்ட 2.7 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகள் குறித்த நிரந்தர டிஜிட்டல் பதிவை வைத்திருக்கும் யு-வின் இணையதளம் இந்த மாத இறுதியில் தொடங்கப்படுவது குறித்தும் திரு அபூர்வ சந்திரா தெரிவித்தார். தேசிய சுகாதார இழப்பீடு பரிமாற்றத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், இது அதிக வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதோடு காப்பீட்டு கோரிக்கைகளின் செயல்முறையை எளிதாக்கும் என்று குறிப்பிட்டதுடன், செயற்கை நுண்ணறிவு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் விவரித்தார்.

"சுகாதாரம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை, நல்ல ஆரோக்கியம் இல்லாமல், ஒரு மனிதனின் முழு திறனையும் உணர முடியாது" என்று திரு பரத் லால் கூறினார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கம், பொருளாதாரத்திலிருந்து சமூக-கலாச்சாரத் துறைகளுக்கு விரிவடைந்துள்ளது என்றும், சுகாதாரத் துறை அனைவரையும் பாதிக்கும் என்பதால், தற்போது இந்தத் துறையிலும் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு என்ற இலக்கை அடைவதை நோக்கி முன்னேறுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய வாக்குறுதியைக் கொண்டுள்ளன" என்று கூறிய அவர், இதுபோன்ற தீர்வுகள் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில், அனைத்து பங்குதாரர்களையும் தொடர்பு கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மனநலம், தொழுநோய் போன்ற பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சுகாதார முயற்சிகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, சங்கலா அறக்கட்டளை மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் கள ஆய்வின் அடிப்படையில், 'உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்கான டிஜிட்டல் தீர்வுகளை மேம்படுத்துதல்' என்ற அறிக்கையையும் பிரமுகர்கள் வெளியிட்டனர். 'சுகாதாரப் பராமரிப்பில் மாற்றத்தின் மாதிரிகள்', 'டிஜிட்டல் ஆரோக்கியத்தில் எதிர்கால எல்லைகள்' மற்றும் 'தொழில்நுட்பம் சார்ந்த உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு' ஆகிய மூன்று தொழில்நுட்ப அமர்வுகள், நாள் முழுவதும் நடைபெறும்.

திரு மதுகர் குமார் பகத், இணைச் செயலாளர் (இ-சுகாதாரம்); டாக்டர் பசந்த் கார்க், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி, தேசிய சுகாதார ஆணையம், திரு கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி, டாடா எம் டி நிறுவனத்தில், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குர், சிவில் சமூகம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள், உலக சுகாதார அமைப்பு, .நா வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் வல்லுநர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

****

(Release ID: 2052458)

MM/KPG/RR



(Release ID: 2052504) Visitor Counter : 36


Read this release in: English , Urdu , Hindi , Gujarati