நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்தியாவில் எரிசக்தி திறனை ஊக்குவிக்க எரிசக்தி திறன் அமைப்புடன் தேசிய சோதனைக் களம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
प्रविष्टि तिथि:
03 SEP 2024 6:45PM by PIB Chennai
நாடு முழுவதும் எரிசக்தி திறனை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய முன்முயற்சியான தரநிலைகள் மற்றும் லேபிளிங் திட்டத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய சோதனை களம், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் எரிசக்தி திறன் பணியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி காரே, மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் பேசிய நுகர்வோர் விவகாரத்துறைச் செயலாளர் திருமதி கரே, தயாரிப்பு தோல்வியடையாமல் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். நுகர்வோருக்கு வசதி செய்து கொடுப்பதற்கும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும் என்று தெரிவித்தார்.
மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு அகர்வால் கூறுகையில், மின் சாதனங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான நட்சத்திர மதிப்பீடுகள் எரிசக்தித் திறன் அமைப்பால் வழங்கப்படுகின்றன என்றார். எங்களிடமிருந்து நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்ற எடுத்த ஒரு தொழில் நிறுவனம் தொடர்ந்து அளவுருக்களை வழங்குகிறதா என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும். இதை உறுதி செய்வதற்காக, சந்தை கண்காணிப்பு மற்றும் நம்பகமான சோதனைக்காக நுகர்வோர் விவகாரத் துறையுடன் இணைந்துள்ளோம் என்று அவர் கூறினார்.
---
IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2051493)
आगंतुक पटल : 75