பாதுகாப்பு அமைச்சகம்
மறைந்த இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பாலுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அஞ்சலி
प्रविष्टि तिथि:
03 SEP 2024 6:12PM by PIB Chennai
செப்டம்பர் 03, 2024 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்திய கடலோர காவல்படை (ICG) தலைமை இயக்குநர் காலஞ்சென்ற ராகேஷ் பாலுக்கு அஞ்சலி மற்றும் இரங்கலை தெரிவித்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட குழு உறுப்பினர்கள் அனைவரும், இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
காலஞ்சென்ற டி.ஜி. ராகேஷ் பால், ஒரு அர்ப்பணிப்புள்ள தலைவர் மற்றும் தேசபக்தர் என்றும், உள்கட்டமைப்பு, தரைவழி மற்றும் வான்வழி சொத்துக்கள் கையகப்படுத்துதல் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படையின் வளர்ச்சிக்கு அவர் மகத்தான பங்களிப்பை வழங்கியவர் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் விவரித்தார். தேசத்திற்கும், இந்திய கடலோர காவல் படைக்கும், அவர் ஆற்றிய சேவை எப்போதும் நினைவுகூரப்படும்.
***
MM/AG/DL
(रिलीज़ आईडी: 2051488)
आगंतुक पटल : 60