எஃகுத்துறை அமைச்சகம்
ஒருங்கிணைந்த முயற்சியில் "பூஜ்ஜிய தாமதத்தை" அடைய ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் தலைமை கூட்டாக உறுதிமொழியேற்பு
Posted On:
02 SEP 2024 6:25PM by PIB Chennai
செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல் மற்றும் செலவினங்களைக் குறைப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையில், விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் பெரு நிறுவனமான ஆர்.ஐ.என்.எல்-இன் தலைமை "பூஜ்ஜிய தாமத பிரச்சார" உறுதிமொழிக்காக ஒன்றிணைந்தது.
ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு அதுல் பட் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், இயக்குநர் (வணிகம்) திரு ஜீ.வி.என் பிரசாத், துறைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு. அதுல் பட், தாமதம் இல்லாத பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "தாமதத்தின் நிதி தாக்கங்கள் கணிசமானவை, மேலும் இந்த பிரச்சினையை நாம் மிகுந்த தீவிரத்துடன் கையாள வேண்டியது அவசியம். இன்று உறுதிமொழி ஏற்பதன் மூலம், நாம் ஒரு முக்கியமான இலக்குக்கு நம்மை அர்ப்பணிப்பது மட்டுமல்லாமல், நம் நிறுவனத்திற்குள் பொறுப்புக்கூறல், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் கலாச்சாரத்தையும் வளர்க்கிறோம்”, என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050963
BR/KR
***
(Release ID: 2051239)
Visitor Counter : 42