விவசாயத்துறை அமைச்சகம்
அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும், பல்வேறு பருவங்களில் விலை ஏற்ற இறக்கங்களைக் குறைக்கவும் சேமிப்பு உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம்: திரு ராம்நாத் தாக்கூர்
प्रविष्टि तिथि:
02 SEP 2024 5:42PM by PIB Chennai
காய்கறி தொகுப்புகளை மையமாகக் கொண்டு தோட்டக்கலை தொகுப்புகள் மற்றும் மதிப்புச் சங்கிலி மேம்பாடு குறித்த பங்குதாரர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் நடத்தியது. இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க விவசாய குழுக்கள், அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.
உழவர் உற்பத்தி அமைப்புகள் மூலம் சிறு விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் வலியுறுத்தினார். அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும், பல்வேறு பருவங்களில் விலை ஏற்ற இறக்கங்களைக் குறைக்கவும் சேமிப்பு உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாட்டின் வெவ்வேறு பகுதிகள் ஒரே உற்பத்திக்கான விலை வேறுபாட்டை எதிர்கொள்கின்றன, இது இத்துறை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினையாகும், என்றார் அவர். குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு என்ற நாடு தழுவிய பிரச்சினையை எதிர்கொள்ள, 'பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்காத குழந்தை இல்லை' என்ற நிலையை உருவாக்க இந்தத் துறை கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பங்குதாரர்களும் தங்களது எதிர்கால விவாதங்கள் அனைத்திலும் விவசாயிகளை மையமாக வைத்து, அவர்களின் லாபத்தை அதிகரிப்பதற்கான தீர்வுகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் திரு தேவேஷ் சதுர்வேதி, இணைச் செயலாளர் திரு சாமுவேல் பிரவீன் குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050942
BR/KR
***
(रिलीज़ आईडी: 2051149)
आगंतुक पटल : 79