இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2024 4:32PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையம், விசாகப்பட்டினம் தாமோதரம் சஞ்சீவய்யா தேசிய சட்டப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு நாள் விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. சட்டப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விவாத நிகழ்ச்சியில் மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. இந்த விவாதத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிகத் தலைவர் திருமதி விஜயா பாரதி சயானி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மீனவ சமுதாயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார். எனவே, அவர்கள் சந்தித்து வரும் சவால்களுக்குத் தீர்வு காண, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்கள் கண்ணியமான வாழ்வாதாரத்தை மேற்கொள்ள உதவுவதும் மிக முக்கிய அம்சங்களாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க மனித உரிமைகள் ஆணையம் உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறினார். இந்தச் சூழலில், மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஆணையம் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.
தாமோதரம் சஞ்சீவய்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டி சூரியப்பிரகாச ராவ், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தியாவின் மீனவ சமுதாயத்தினருக்கு இழைக்கப்படும் மனித உரிமைகள் மீறல்கள், மீன்பிடி உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
----
PKV/KPG/KR/DL