ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

2024-25 நிதியாண்டில் ஆகஸ்ட் வரை நிலக்கரி உற்பத்தி 384 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது

Posted On: 02 SEP 2024 3:34PM by PIB Chennai

ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் நிலக்கரி அமைச்சகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ஆகஸ்ட் 2024 வரை 384.08 மில்லியன் டன்களை (தற்காலிக) எட்டியுள்ளது, 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 360.71 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், இது 6.48% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

கோல் இந்தியா நிறுவனத்தின் (CIL) உற்பத்தி, 2024 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 290.39 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது, இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 281.46 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 3.17% வளர்ச்சியைக் குறிக்கிறது. கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தியும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தியது, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2024 வரை 68.99 மெட்ரிக் டன்னை எட்டியது - இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 52.84 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, 30.56% கணிசமான அதிகரிப்பு ஆகும்.

இதற்கிடையில், ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதல் ஆகஸ்ட் 2024 வரை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது.  ஆகஸ்ட் 2024 வரை ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதல் 2024-25 நிதியாண்டில் 412.07 மில்லியன் டன் (தற்காலிகமானது) ஆக இருந்தது, இது 2023-24 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 391.93 மில்லியன் டன்னாக இருந்தது, இது 5.14% பாராட்டத்தக்க வளர்ச்சியை பிரதிபலிக்கிறது

 

கோல் இந்தியா நிறுவனம் 2024 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 309.98 மெட்ரிக் டன் நிலக்கரியை அனுப்பியது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அனுப்பப்பட்ட 305.37 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 1.51% வளர்ச்சியை அடைந்தது. கூடுதலாக, கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்கள் 76.95 மில்லியன் டன் குறிப்பிடத்தக்க நிலக்கரி அனுப்புதலைப் பதிவு செய்தன, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அனுப்பப்பட்ட 58.53 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 31.48% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சி, துறையின் மேம்பட்ட தளவாட திறன்கள் மற்றும் நிலையான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.  

 

***

(Release ID: 2050865)

MM/RS/DL



(Release ID: 2050992) Visitor Counter : 38


Read this release in: English , Manipuri , Urdu , Hindi