பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

மும்பை -இந்தூர் இடையே ரயில் இணைப்பை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 02 SEP 2024 3:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் ரூ.18,036 கோடி மதிப்பீட்டிலான புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தூர்-மன்மாட் இடையே முன்மொழியப்பட்டுள்ள புதிய பாதை நேரடி இணைப்பை வழங்குவதுடன், இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறனையும், சேவை நம்பகத்தன்மையையும் அளிக்கும். இந்தத் திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப  உள்ளது.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 309 கி.மீ. வரை அதிகரிக்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம், 30 புதிய ரயில் நிலையங்கள் கட்டப்படும். இது முன்னேற விரும்பும் மாவட்டமான பர்வானிக்கு இணைப்பை மேம்படுத்தும். புதிய வழித்தடத் திட்டம் சுமார் 1,000 கிராமங்களுக்கும் சுமார் 30 லட்சம் மக்களுக்கும் இணைப்பை வழங்கும்.

மத்திய இந்தியாவுடன் நாட்டின் மேற்கு/தென்மேற்கு பகுதிகளுக்கு   குறுகிய பாதையை அமைப்பதன் மூலம் இந்த பிராந்தியத்தில் சுற்றுலா மேம்படும்.

மத்தியப் பிரதேசத்தில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களுக்கும் நேரடி இணைப்பை இத்திட்டம் வழங்குவதுடன், நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு வெங்காயம் விநியோகம் செய்யவும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050855

***

SMB/KV/KR/DL



(Release ID: 2050978) Visitor Counter : 42