வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பாசுமதி அல்லாத அரிசி ரகங்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்த மத்திய அரசு முயற்சி
Posted On:
02 SEP 2024 1:22PM by PIB Chennai
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய மையத்துடன் இணைந்து புதுதில்லியில் 29 ஆகஸ்ட் 2024 அன்று "பாசுமதி அல்லாத அரிசியின் மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளின் விவரக்குறிப்பு" குறித்த பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கு இரண்டு முன்னோடி ஆராய்ச்சி திட்டங்களின் முடிவுகளை வெளிப்படுத்தியது,
வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் தனது தலைமை உரையில், பாசுமதி அல்லாத அரிசி வகைகளில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளைப் பாராட்டினார். இந்தக் கூட்டு முயற்சி மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், அடையாளம் காணப்பட்ட பாசுமதி அல்லாத அரிசி வகைகள் குறிப்பிடத்தக்க ஏற்றுமதி திறனைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் காலநிலை நெகிழ்திறன் போன்ற சுகாதார நன்மைகளையும் கொண்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார். பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் மதிப்புக் கூட்டல் மற்றும் பிராண்டிங் குறித்து அவர் மேலும் கவனத்தை ஈர்த்தார்.
அபியேடா தலைவர் திரு அபிஷேக் தேவ், இந்தியாவில் அரிசி தொழிலின் முக்கியத்துவம், மதிப்புக் கூட்டுதலின் அவசியம், நீடித்த தன்மை, உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி ஆகியவை குறித்த சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கவும், மதிப்புச் சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கவும் கூட்டு முயற்சி தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். அரிசி ஏற்றுமதி மற்றும் அரிசி சார்ந்த உற்பத்திகளை அதிகரிப்பதற்கான உத்திகளை உருவாக்குவதற்கான தொடக்கப் புள்ளியை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050792
***
SMB/KV/KR/DL
(Release ID: 2050957)
Visitor Counter : 78