எரிசக்தி அமைச்சகம்

'நவரத்னா' அந்தஸ்து பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களை மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பாராட்டினார்

Posted On: 01 SEP 2024 3:39PM by PIB Chennai

மத்திய  அரசால் 'நவரத்னா' அந்தஸ்து வழங்கப்பட்ட தேசிய புனல் மின் கழகம் (என்.எச்.பி.சி) சட்லஜ் ஜல் வித்யுத் நிகம்  (எஸ்.ஜே.வி.என்.எல்) ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களை மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் இன்று பாராட்டினார்.

பொது நிறுவனங்கள் துறை (நிதி அமைச்சகம்) 30.08.2024 அன்று வெளியிட்ட உத்தரவு, இந்த முன்னணி நீர்மின் நிறுவனங்களுக்கு  அதிக செயல்பாட்டு மற்றும் நிதி சுயாட்சியை வழங்குகிறது.

 இந்த வளர்ச்சி இரு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என்று பாராட்டிய மனோகர் லால், எதிர்காலத்தில்  மேலும் பெரிய சாதனைகளை படைக்க இவை  தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "பசுமைக் குடில் வாயுக்கள் அல்லது பிற மாசுபடுத்திகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு மின்சாரம் வழங்குவதற்கு வழிவகுக்கும் நீர் மின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் என்.எச்.பி.சிஎஸ்.ஜே.வி.என்.எல் போன்ற  பொதுத்துறை புனல் மின்  நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் இது நாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிதாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன்,என்.எச்.பி.சி, எஸ்.ஜே.வி.என்.எல் ஆகியவை வெளிநாடுகளில் கூட்டு முயற்சிகளை நிறுவவும், புதிய சந்தைகளை அணுகவும், உள்ளூர் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும் சுயாட்சி பெற்றிருக்கும். மேலும், தொழில்நுட்ப கூட்டணிகள் மூலம் புதுமையை வளர்க்கும், சந்தை நிலைப்பாட்டை வலுப்படுத்தும்இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்களை எளிதாக்கும்அதிகரித்த சந்தை பங்குடன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

*****

SMB / KV

 

 



(Release ID: 2050677) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi