குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தேச விரோத கதைகளை பரப்புவதும், நமது ஜனநாயகத்திற்கு சவால் விடுவதும் துரதிர்ஷ்டவசமானது கவலையளிப்பது என்று குடியரசு துணைத்தலைவர் கூறியுள்ளார்

Posted On: 31 AUG 2024 6:42PM by PIB Chennai

நமது ஜனநாயகம் மற்றும் தேசியவாத உணர்வுக்கு ஒரு காலத்தில் ஆட்சியில் அல்லது அதிகாரப் பதவியில் இருந்தவர்களிடமிருந்து சவால்கள் வருவது துரதிர்ஷ்டவசமானது என்று குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். "குறுகிய கட்சி நலன்களுக்காக, அவர்கள் தேச விரோத கதைகளை பரப்பி, நமது மகத்தான ஜனநாயகத்தை அண்டை நாடுகளின் அமைப்புடன் ஒப்பிடும் அளவிற்கு செல்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர்-ஐஐபி-யில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், தங்கள் உண்மையான நோக்கங்களை மறைப்பதன் மூலமும்நாட்டின் அதிவேகமான வளர்ச்சியைத் திசை திருப்புவதன் மூலமும் நம்மை தவறாக வழிநடத்த இவர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள் என்று  இளைஞர்களை எச்சரிக்கை செய்தார்.

இந்தியாவின் நிலையான ஜனநாயகத்திற்கும், அண்டை நாடுகளின் அமைப்புகளுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பீடுகளை கடுமையாக விமர்சித்த அவர், "நாம் எவ்வகையிலும் ஒப்பிட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். இதுபோன்ற கதைகளுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர், இந்த ஒப்பீடுகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடான இந்தியா, தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்றும் பிரதமரின் தலைமையில், இதுபோன்ற அவதூறான கருத்துக்களுக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார். "இங்குள்ள தேசம், தேசியவாதம் மற்றும் ஜனநாயகத்தை நம்பும் எவருக்கும் இந்த சிந்தனை எவ்வாறு தோன்றும்?" என்று வினவிய அவர், அத்தகைய கதையாடல்களை "கோழைத்தனமானது"  "வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது" என்று கண்டனம் செய்தார்.

பருவநிலை நீதியின் அவசியத்தை வலியுறுத்திய திரு தன்கர், "பருவநிலை மாற்றம் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை விகிதாச்சாரமற்ற முறையில் பாதிக்கிறது, அதனால்தான் பருவநிலை நீதி என்பது நமது வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

அன்னை பூமியின் குழந்தைகள் என்ற முறையில் நமது பூமியைப் பாதுகாக்கவும், நமது புவிக்கோளினை  மேம்படுத்தவும் நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. உலகளாவிய கடமைகளில் பாரதத்தின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பிரதான நீரோட்டத்தில் சேர்ப்பதை திரு தன்கர் பாராட்டினார், நமது பாரதம் உள்நாட்டு நிர்வாகத்தில் நிலைத்தன்மையை பிரதான நீரோட்டத்தில் சேர்ப்பது மட்டுமின்றி, உலகத்திலிருந்து நம்மை தனிமைப்படுத்திக் கொள்ளாததால் உலகளாவிய கடமைகளுக்கும் வழிகாட்டுகிறது. அதனால்தான்  வசுதைவ குடும்பகம் - உலகம் ஒரே குடும்பம் என்று சொல்கிறோம் - .

குவாண்டம் கம்ப்யூட்டிங், 6ஜி போன்ற முன்னோடி தொழில்நுட்பத் துறையில் நாடு சமீபத்தில் அடைந்துள்ள முன்னேற்றங்களை சுட்டிக் காட்டிய குடியரசு துணைத்தலைவர், நாம் இனியும் மேற்கத்திய நாடுகளைப் பார்க்காமல், இந்தத் துறைகளில் புதுமையாக இருக்க வேண்டிய நேரம் இது என்றார்

உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங், சிஎஸ்ஐஆர்-ஐஐபி இயக்குநர் டாக்டர் எச்.எஸ்.பிஷ்ட், மாணவர்கள் மற்றும் பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

********

SMB/DL



(Release ID: 2050480) Visitor Counter : 33