மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை தொற்று நோய்களுக்கு முன்னுரிமை அளித்தல் குறித்த முக்கிய பயிலரங்கு புதுதில்லியில் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது
Posted On:
31 AUG 2024 2:49PM by PIB Chennai
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையுடன் இணைந்து உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கால்நடை தொற்று நோய்களுக்கு முன்னுரிமை அளித்தல் குறித்த மூன்று நாள் பயிலரங்கு புதுதில்லியில் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்வு ஐசிஏஆர் நிறுவனங்கள், கால்நடை பல்கலைக்கழகங்கள், மாநில கால்நடை பராமரிப்புத் துறைகள், சர்வதேச அமைப்புகள் உள்பட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 69 நிபுணர்களை ஒன்றிணைத்தது.
நிறைவு விழாவில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், விலங்கு ஆரோக்கியத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார். கால் & வாய் நோய் (எஃப்எம்டி), பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ் (பிபிஆர்), புருசெல்லோசிஸ் மற்றும் கிளாசிக்கல் பன்றி காய்ச்சல் ஆகிய 4 நோய்களைக் கட்டுப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கங்களால் ஆதரிக்கப்படுகின்றன. இது மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது என அவர் கூறினார்.
மேம்பட்ட தடுப்பூசி முயற்சிகள் நடந்து வரும் எட்டு மாநிலங்களில் எஃப்எம்டி இல்லாத மண்டலங்களை நிறுவுவதற்கான திட்டங்களையும் திருமதி உபாத்யாயா கோடிட்டுக் காட்டினார். விலங்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்னுரிமை நோய் பட்டியலை இறுதி செய்வதில் நிபுணர்களின் கூட்டு முயற்சிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
நிறைவு விழாவில் கால்நடை பராமரிப்பு ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா, கால்நடை சுகாதாரத் துறை இணைச் செயலாளர் திருமதி சரிதா சவுகான், இந்தியாவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி திரு. தகாயுகி ஹகிவாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
********
PKV/DL
(Release ID: 2050454)
Visitor Counter : 52