தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழிலாளர் சீர்திருத்தங்களை ஊக்குவிப்பது தொடர்பான பிராந்தியக் கூட்டம்: மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே தலைமை வகித்தார்
Posted On:
30 AUG 2024 7:21PM by PIB Chennai
கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய ஆறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் செல்வி ஷோபா கரந்தலாஜே தலைமையில் இன்று (30.08.2024) ஒரு முக்கியமான பிராந்திய கூட்டம் நடைபெற்றது. கர்நாடக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சந்தோஷ் லாட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் தொழிலாளர் அமைச்சகம் மேற்கொள்ளவும் ஆறு பிராந்திய கூட்டங்களில் இது முதல் கூட்டமாகும்.
தொழிலாளர் சீர்திருத்தங்கள், இ - ஷ்ரம் தளம், பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நலன், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவை குறித்த விவாதங்கள் இக்கூட்டத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலாஜே, தொழிலாளர் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மத்திய அரசு வகுத்துள்ள ஒட்டுமொத்த தொலைநோக்குத் திட்டத்தின்படி, அனைத்து மாநிலங்களும் மற்ற மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதில் மாநிலங்களின் பங்கை அவர் எடுத்துரைத்தார். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இ-ஷ்ரம் தளம் உட்பட மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு வழிமுறைகளைப் திறம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டார்.
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தொழிலாளர் துறையை சீர்திருத்துவதில் 'ஒட்டுமொத்த அரசு' அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான, எளிதான இணக்கத்தை உறுதி செய்வதற்காக மாநிலங்கள் மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இ-ஷ்ரம் தளத்தின் நன்மைகளை எடுத்துக்காட்டிய அவர், இதன் மூலம் சமூகப் பாதுகாப்பு, நலத்திட்டங்களை எளிதாக அணுக முடியும் என்றார்.
வேலைவாய்ப்பு உருவாக்கம், வேலைவாய்ப்பு அலுவலகங்களை நவீனப்படுத்துதல், கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை உருவாக்குதல், தொழில்துறை ஒத்துழைப்பு போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
********
PLM/DL
(Release ID: 2050265)
Visitor Counter : 57