புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
ஐஆர்இடிஏ சர்வதேச தர மதிப்பீட்டைப் பெற்றது
Posted On:
29 AUG 2024 7:26PM by PIB Chennai
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையான ஐஆர்இடிஏ இன்று சர்வதேச தர மதிப்பீட்டைப் பெற்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
இந்த மதிப்பீடு ஐஆர்இடிஏ சர்வதேச சந்தையில் அதன் வரம்பை விரிவுபடுத்தவும், கவர்ச்சிகரமான நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தவும், அதன் கடன் வாங்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்கவும் உதவும். எஸ் அண்ட் பி குளோபல் இன்று வெளியிட்ட மதிப்பீட்டு புதுப்பிப்பில், நிறுவனம் கூறியது, "தற்போதைய அரசு ஆதரவை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவில் நிதி நிறுவனங்களை (ஃபின்கோஸ்) மதிப்பிடுவதற்கான எங்கள் தொடக்க புள்ளியை விட ஐஆர்இடிஏவை ஒரு படி மேலே மதிப்பிடுகிறோம்." என்று கூறியுள்ளது.
ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ் இந்தச் சாதனை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "ஐ.ஆர்.இ.டி.ஏ-க்கு வழங்கப்பட்ட சர்வதேச தர மதிப்பீடு கார்ப்பரேட் ஆளுகையின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதற்கும் எங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பராமரிப்பதற்கும் எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். இந்தத் தரமதிப்பீடு போட்டி விகிதங்களில் நிதிகளைப் பெறுவதற்கும் உலகளாவிய சந்தைகளில் நமது தடத்தை மேம்படுத்துவதற்கும் எங்கள் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும். எங்கள் வலுவான சந்தை நிலை, வலுவான நிதி செயல்திறன் மற்றும் நிலையான வளர்ச்சியை இயக்குவதற்கு முன்மாதிரியான கார்ப்பரேட் ஆளுகை ஆகியவற்றைப் பேணுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்’’ என்று கூறினார்
**********************
PKV/KV
(Release ID: 2049989)
Visitor Counter : 72