ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுமார் 1 ஏக்கர் நிலத்தில் "மகளிர் வனம்" அமைக்கப்படும்: திரு சிவராஜ் சிங் சவுகான்

Posted On: 29 AUG 2024 1:57PM by PIB Chennai

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், இன்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் "மகளிர் வனம்" அமைக்கப்படும் என்று திரு சவுகான் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளர் டாக்டர் ஹிமான்ஷு பதக், மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் 200 அதிகாரிகள் / ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டில் உள்ள வேளாண், விசாயிகள் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிறுவனங்கள், மத்திய வேளாண் பல்கலைக் கழகங்கள், வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் அனைத்து சார்நிலை அலுவலகங்களும் ஒரே நேரத்தில் அந்தந்த இடங்களில் இதே போன்ற மரம் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்தார். இன்று, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன என்றும், இந்த நிகழ்ச்சியின்போது 3000-4000 மரக்கன்றுகள் நடப்பட்டன என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் திரு சவுகான் தெரிவித்தார்.

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2024 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் உலகளாவிய இயக்கத்தை தொடங்கி வைத்தார் என்றும், பிரதமரின் தீர்மானத்தை உறுதி செய்வதற்காக நமது அமைச்சகங்கள் இன்று தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தை மக்கள் இயக்கமாகத் தொடங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். இந்த இயக்கத்தில் கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், மரங்களை நட்டு தங்கள் பூமித் தாய்க்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் திரு சவுகான் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், செப்டம்பர் 2024-க்குள் நாடு முழுவதும் 80 கோடி மரக்கன்றுகளையும், மார்ச் 2025-க்குள் 140 கோடி மரக்கன்றுகளையும் நடவு செய்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஜூன் 20, 2024 அன்று அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்தில் மரம் நடும் நடவடிக்கையைத் தொடங்கியது. இதில், தனிநபர்கள் தங்கள் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டனர். மரங்களை நடவு செய்வது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுள்ள வாழ்க்கை முறையின் வெகுஜன இயக்கமான அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மிஷன் லைஃப் நோக்கத்தையும் நிறைவேற்றுகிறது. விவசாயத்தில், மரங்களை வளர்ப்பது, நிலையான விவசாயத்தை அடைய ஒரு முக்கியமான படியாகும். மண், நீரின் தரம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம் பண்ணை உற்பத்தித்திறனை அதிகரிக்க மரங்கள் உதவுகின்றன. மரக்கட்டை மற்றும் மரக்கட்டை அல்லாத விளைபொருட்களிலிருந்து விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஆதாரத்தையும் மரங்கள் வழங்குகின்றன. நிலம் தரமிழத்தல் மற்றும் பாலைவனமாதல் ஆகியவற்றைத் தடுக்கவும், மாற்றியமைக்கவும் இந்த இயக்கம் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.

***

MM/KPG/KR/DL


(Release ID: 2049907) Visitor Counter : 37