பாதுகாப்பு அமைச்சகம்
சிந்துதுர்க் ராஜ்கோட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கூட்டுக்குழு விசாரிக்க உள்ளது
प्रविष्टि तिथि:
29 AUG 2024 12:51PM by PIB Chennai
மோசமான வானிலை காரணமாக சிந்துதுர்க்கின் ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரிக்க இந்திய கடற்படை தலைமையில் மகாராஷ்டிரா அரசின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட கூட்டு தொழில்நுட்பக் குழு அமைக்கப்படுகிறது.
கடல்சார் பாதுகாப்பில் மராட்டிய கடற்படை, சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிறப்பு மற்றும் நவீன இந்திய கடற்படையுடன் அதன் வரலாற்று தொடர்பை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு சிந்துதுர்க்கில் முதன்முறையாக நடத்தப்பட்ட கடற்படை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த சிலை 2023, டிசம்பர் 4 அன்று திறக்கப்பட்டது. இந்த சிலையை மாநில அரசுடன் ஒருங்கிணைந்து நிதி அளித்து இந்தியக் கடற்படை நிறுவியது.
சிலையை விரைவில் பழுதுபார்த்து, சீரமைத்து மீண்டும் நிறுவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உதவ இந்திய கடற்படை உறுதிபூண்டுள்ளது.
*******
(Release ID: 2049659)
IR/RS/KR
(रिलीज़ आईडी: 2049671)
आगंतुक पटल : 113