மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-ம் ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் பெற உயர்கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக் ஆகியவற்றிலிருந்து 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

Posted On: 28 AUG 2024 6:46PM by PIB Chennai

2024-ம் ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் பெற உயர்கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக் ஆகியவற்றிலிருந்து 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேசிய விருதுகள் இரண்டு வகைகளில் வழங்கப்படுகின்றன. முதல் வகை உயர்கல்வி நிறுவனங்களின் மூன்று துணைப் பிரிவுகளில் 6 விருதுகளை கொண்டது.

துணைப் பிரிவு ஒன்று: பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டடக்கலை.

துணைப்பிரிவு இரண்டு: கணிதம், இயற்பியல், உயிரி அறிவியல், வேதி அறிவியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள்.

துணைப்பிரிவு மூன்று: கலை மற்றும் சமூக அறிவியல், மொழிகள், சட்டப்படிப்புகள், வணிகம், நிர்வாகம்.

இரண்டாவது பிரிவு: பாலிடெக்னிக் நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு 10 விருதுகள்.

2024-ம் ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் பெற www.awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி 16 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டதை இரண்டு பேர் தமிழ்நாட்டையும், ஒருவர் புதுச்சேரியையும் சேர்ந்தவர்கள். சேலத்தில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஏ.காந்திமதி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள சவீதா பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஸ்மைலைன் கிரிஜா ஆகியோர் தேசிய விருது பெறுகின்றனர்.

புதுச்சேரி காலாப்பேட்டையில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் டாக்டர் சாயாபுரம் ஜெயசங்கர் பாபு தேசிய ஆசிரியர் விருதினை பெறுகிறார்.

***

(Release ID: 2049495)
SMB/RR/KR


(Release ID: 2049653) Visitor Counter : 53


Read this release in: English , Urdu , Hindi , Manipuri