கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பெரிய துறைமுகங்களின் தொழிலாளர்களுக்கான ஊதிய திருத்தத்திற்கு மத்திய துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஒப்புதல் அளித்துள்ளார்
Posted On:
28 AUG 2024 6:15PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், நாட்டின் 12 முக்கிய துறைமுகங்களில் நடவடிக்கைகளை தடை செய்யும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக, இருதரப்பு ஊதிய பேச்சுவார்த்தைக் குழு மற்றும் இந்திய துறைமுக சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊதிய கட்டமைப்பை திருத்தியமைக்க உதவுகிறது மற்றும் ஓய்வூதிய பலன்கள் உட்பட பிற சேவை நிபந்தனைகளை நிவர்த்தி செய்கிறது. 1-1-2022 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஊதிய விகிதங்கள், தற்போதுள்ள நடைமுறைகளின்படி வடிவமைக்கப்படும்.
முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, 1-1-2027 முதல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான எதிர்கால ஊதிய திருத்தங்களின் காலத்தை சீரமைப்பது குறித்து பரிசீலிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
கூடுதலாக, 1-1-2022 முதல் 31-12-2026 வரை அல்லது பணியாளர் ஓய்வு பெறும் தேதி வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ.500 சிறப்புப் படி வழங்கப்படும்.
வெற்றிகரமான இம்முடிவு குறித்து அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் கூறுகையில், இந்திய கடல்சார் துறையின் முதுகெலும்பாக இருக்கும் நமது துறைமுக தொழிலாளர்களுக்கு நியாயமான மற்றும் சமமான ஊதியத்தை உறுதி செய்வதில் இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையைக் குறிக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கிடைத்தது. அனைத்து இந்திய துறைமுகங்களிலும் இணக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமான பணிச்சூழலை வளர்ப்பதற்கான தமது அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கடைப்பிடித்ததற்காக தொழிலாளர் சம்மேளனங்களையும், இந்திய துறைமுக சங்கத்தையும் திரு சோனாவால் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049472
---
IR/KPG/DL
(Release ID: 2049503)
Visitor Counter : 127