சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் அல்லது வாகன ஸ்கிராப்பிங் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 28 AUG 2024 9:00AM by PIB Chennai

பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகள் (ஆர்.வி.எஸ்.எஃப்) மற்றும் தானியங்கி சோதனை நிலையங்கள் (ஏ.டி.எஸ்) நெட்வொர்க் மூலம் நாடு முழுவதும் தகுதியற்ற மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் அல்லது வாகன ஸ்கிராப்பிங் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, 17 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட (60+) ஆர்விஎஸ்எஃப்-களும், 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் எழுபத்தைந்து (75+) ஏடிஎஸ்-களும் நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

 

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை பாரத் மண்டபத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர்கள் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் திரு அஜய் தம்தா முன்னிலையில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரிகள் குழுவினருடன் விரிவாக கலந்துரையாடினார். இது தனியாருக்குச் சொந்தமான வணிக மற்றும் பயணிகள் வாகனங்களை அகற்றுவதை ஊக்குவிக்கிறது.

 

இந்த கலந்துரையாடலின் அடிப்படையில், நவீனமயமாக்கல் மற்றும் வட்டப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், பல்வேறு வர்த்தக மற்றும் பயணிகள் வாகன உற்பத்தியாளர்கள் வைப்புச் சான்றிதழுக்கு (ஸ்கிராப்பேஜ் சான்றிதழ்) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளுபடி வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர். வர்த்தக வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் பயணிகள் வாகன உற்பத்தியாளர்கள் முறையே இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒரு வருடம் என்ற வரையறுக்கப்பட்ட காலத்திற்கு தள்ளுபடிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தள்ளுபடிகள் ஆயுட்காலம் முடிந்த வாகனங்களை அகற்றுவதை மேலும் ஊக்குவிப்பதுடன், பாதுகாப்பான, தூய்மையான மற்றும் திறன்மிக்க வாகனங்கள் சாலைகளில் இயக்கப்படுவதை உறுதி செய்யும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049367

 

***


PKV/RR/KR/DL



(Release ID: 2049450) Visitor Counter : 19