பிரதமர் அலுவலகம்
மக்கள் வங்கித் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை ஊக்குவிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்களுக்கு கண்ணியத்தை அளிப்பதிலும் மக்கள் வங்கித் திட்டம் மிக முக்கியமானது: பிரதமர்
प्रविष्टि तिथि:
28 AUG 2024 9:50AM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை வழங்கும் மக்கள் வங்கித் திட்டத்தின் 10-வது ஆண்டை இன்று கொண்டாடும் வகையில் அதன் முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இத் திட்டத்தின் பயனாளிகள் அனைவரையும் பாராட்டியுள்ள பிரதமர், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக மாற்றிய அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை ஊக்குவிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதிலும் மக்கள் வங்கித் திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று திரு மோடி கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
"இன்று நாம் ஒரு முக்கியமான தருணத்தைக் கொண்டாடுகிறோம் . 10 ஆண்டு கால மக்கள் வங்கித் திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு கண்ணியத்தை வழங்குவதிலும் மக்கள் வங்கித் திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்”.
***
(Release ID: 2049248)
PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2049256)
आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam