எஃகுத்துறை அமைச்சகம்
2024 முதல் 2029 வரையிலான காலத்திற்கு ஹைட்ராலிக், உயவு எண்ணெய், கிரீஸ் ஆகியவற்றை வழங்க ஆர்ஐஎன்எல்- ஐஓசிஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
27 AUG 2024 6:14PM by PIB Chennai
2024 முதல் 2029 வரை 5 ஆண்டு காலத்திற்கு ஹைட்ராலிக், உயவு எண்ணெய், கிரீஸ் ஆகியவற்றை வழங்க தேசிய இஸ்பாட் நிகாம் (ஆர்ஐஎன்எல்)- இந்திய எண்ணெய் கழகம் (ஐஓசிஎல்) இடையே இன்று விசாகப்பட்டினத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஐஎன்எல் இயக்குநர் (திட்டங்கள்) திரு ஏ கே பக்சி, தேச கட்டுமானத்திற்காக மாறுபட்ட தொழில்துறைகள் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்துவதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது என்றார். ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் செயல்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய மிக முக்கியமான பலவகை தரத்தில் உயவுப் பொருட்களை உருவாக்கியிருக்கும் ஐஓசிஎல் நிறுவனத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஐஓசிஎல் நிர்வாக இயக்குநர் (உயவு பொருட்கள்) திரு ஆர் உதய் குமார் பேசுகையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு புதிய மைல் கல் என்று குறிப்பிட்டார். நம்பிக்கை மற்றும் தொழில்முறை சிறப்பு காரணமாக இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே 30 ஆண்டுகளுக்கும் அதிகமான உறவு நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையே முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் 1994-ல் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2049177
***
(रिलीज़ आईडी: 2049209)
आगंतुक पटल : 70