பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி தெற்கு கடற்படைத்தளத்திற்கு வருகை
Posted On:
27 AUG 2024 5:54PM by PIB Chennai
கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்திற்கு முதல் பயணமாக 2024 ஆகஸ்ட் 26 அன்று வருகை தந்தார்.
தெற்கு கடற்படை தளத்தின் தளபதி வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸுடன் அவர் கலந்துரையாடினார். தளத்தில் முன்னேற்றமடைந்த பல்வேறு பயிற்சி, செயல்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து கடற்படை தலைமை தளபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய கடற்படையின் பயிற்சி ஆணையகமாக இருப்பதால், இத்தளத்தில் உள்ள பயிற்சி பற்றிய விரிவான கண்ணோட்டம், பல்வேறு பயிற்சி வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் ஆகியவை குறித்தும் விரிவான விளக்கம் தரப்பட்டது. அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கத்தை கடற்படை தலைமை தளபதி திறந்து வைத்தார். மற்றொரு நிகழ்ச்சியில், கொச்சியில் உள்ள கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளத்தில் புதிய யார்டு பயன்பாட்டு வளாகத்தை தலைமை தளபதி திறந்து வைத்தார்.
***
LKS/AG/DL
(Release ID: 2049189)