ரெயில்வே அமைச்சகம்
துமகூரு ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்- ரயில்வே இணை அமைச்சர் திரு வி. சோமண்ணா தொடங்கி வைத்தார்
Posted On:
23 AUG 2024 7:00PM by PIB Chennai
மத்திய ரயில்வே, ஜல் சக்தி துறை இணை அமைச்சர் திரு வி.சோமண்ணா, இன்று தும்கூர் ரயில் நிலையத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் வசதியைத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன்படி தார்வாட் - கே.எஸ்.ஆர் பெங்களூரு, கே.எஸ்.ஆர் பெங்களூரு - தார்வாட் ரயில்கள் தும்கூருவில் நின்று செல்லும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு வி.சோமண்ணா, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். 'ரயில்வேயை நாட்டின் வளர்ச்சி இயந்திரம்' என்று பிரதமர் வர்ணித்துள்ளார் என்று அவர் கூறினார். பிரதமரின் தலைமையின் கீழ், ரயில்வே திட்டங்களுக்கு கர்நாடகாவுக்கு 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
திரு வி சோமண்ணா ரயில்வே அதிகாரிகளுடன் தும்கூரிலிருந்து யஷ்வந்த்பூருக்கு அதே ரயிலில் பயணம் செய்தார்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள், தினசரி அலுவலகம் செல்லும் மக்கள், தொழிற்சாலை ஊழியர்கள் போன்றவர்களுக்கு உதவும் வகையில் தும்கூர் - பெங்களூரு இடையே மெமு தினசரி ரயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
****
PLM/KV
(Release ID: 2048443)
Visitor Counter : 41