தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பிஎம்- வானி திட்டத்திற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்த தொலைத்தொடர்பு கட்டண வரைவு திருத்த உத்தரவை டிராய் வெளியிட்டது
Posted On:
23 AUG 2024 7:04PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று "பிஎம்-வானி திட்டத்திற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு" குறித்த வரைவு தொலைத்தொடர்பு கட்டண (70வதுதிருத்தம்) ஆணை, 2024 ஐ வெளியிட்டுள்ளது.
'கனெக்ட் இந்தியா' இயக்கத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு கொள்கை, 2018, வலுவான டிஜிட்டல் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக 2022 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியன் பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவ இலக்கு நிர்ணயித்தது. மேலும், பாரத் 6 ஜி விஷன் டிஜிட்டல் இந்தியா 2030 மொபைல் மற்றும் பிராட்பேண்ட் கொள்கை நோக்கங்களுக்காக 2030 க்குள் 50 மில்லியன் இலக்கை நிர்ணயிக்கிறது. இருப்பினும், என்.டி.சி.பி, 2018 ஆவணம் மற்றும் பாரத் 6 ஜி விஷன் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பி.எம்-வானி ஹாட்ஸ்பாட் எண்கள் தற்போது இலக்கு எண்களை விட மிகக் குறைவாக உள்ளன.
நவம்பர் 2022 இல், தொலைத்தொடர்புத் துறை, டிராய்க்கு அனுப்பிய தகவலில், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் பொது தரவு அலுவலகங்களிலிருந்து வசூலிக்கும் பேக்ஹால் இணைய இணைப்பின் மிக அதிக செலவு காரணமாக பிஎம்- வானி திட்டத்தின் பெருக்கம் மிகவும் குறைவானது மற்றும் இலக்குகளை விட மிகக் குறைவு என்று கூறியது. மேலும், வர்த்தக ஒப்பந்தங்கள் என்ற பெயரில், வழக்கமான ஃபைபர்-டு-தி-ஹோம் (எஃப்.டி.டி.எச்) பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு பதிலாக விலையுயர்ந்த இணைய குத்தகை கோடுகளைப் பயன்படுத்தி பொது வைஃபை அணுகல் புள்ளிகளை இணைக்க டி.எஸ்.பி.க்கள் / ஐ.எஸ்.பி.க்கள் பெரும்பாலும் பி.டி.ஓக்களை வலியுறுத்துகிறார்கள்.
இந்த பிரச்சினையை ஆணையம் பகுப்பாய்வு செய்துள்ளது மற்றும் பிஎம்-வானி திட்டத்தின் பெருக்கத்தை விரைவுபடுத்த பிராட்பேண்ட் இணைப்புக்கான செலவை வரையறுப்பது அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, பொது தரவு அலுவலகத்திற்கான கட்டணம் சில்லறை பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என்று ஆணையம் முன்மொழிகிறது.
இந்த வரைவு திருத்த ஆணை டிராய் இணையதளத்தில் (www.trai.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் எழுத்துப்பூர்வ கருத்துக்களை செப்டம்பர் 6ந் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் எதிர் கருத்துகள், ஏதேனும் இருந்தால், அவற்றை செப்டம்பர் 13-க்குள் டிராய் ஆலோசகர் (நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வு) திரு அமித் சர்மாவுக்கு மின்னணு வடிவத்தில் மின்னஞ்சல் முகவரி: fa@trai.gov.in இல் சமர்ப்பிக்கலாம்.
***************
PKV/KV
(Release ID: 2048436)
Visitor Counter : 38