நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகக் கட்டடம்: மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

Posted On: 23 AUG 2024 6:16PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சரக்கு  மற்றும் சேவை வரி அலுவலகக் கட்டடத்தை, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார்.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தனது முக்கிய உரையில், துத்தநாகம், ஈயம், வெள்ளி, சிமெண்ட், உரம் மற்றும் டயர்கள் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் ஒரு பகுதியில் செயல்படுவதால் உதய்பூர் ஆணையரகத்தின் பொருளாதார முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சரக்கு மற்றும் சேவை வரி மண்டலங்களின் ஆணையரகங்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த 2019 முதல் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேர்மறையான உரையாடல் மூலம் தீர்வுகளை ஒருங்கிணைக்க வர்த்தக மற்றும் வரி அதிகாரிகளுக்கு இடையேயான வழக்கமான கலந்துரையாடலை ஊக்குவித்த திருமதி நிர்மலா சீதாராமன், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான குறைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என்றும், மேலும் சீர்திருத்தம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காண, துறை வாரியாக திட்டங்களைப“ பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

----

LKS/KPG/DL



(Release ID: 2048304) Visitor Counter : 39


Read this release in: Telugu , English , Urdu , Hindi