சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா, இணையமைச்சர்கள் திருமதி அனுப்பிரியா படேல், திரு பிரதாப்ராவ் ஜாதவ் முன்னிலையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் தேசிய மருத்துவ பதிவு இணைய தளத்தை தொடங்கி வைத்தார்

Posted On: 23 AUG 2024 5:57PM by PIB Chennai

இந்தியாவில் பதிவு செய்ய தகுதியுள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்கான தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) இணையதளத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய மருத்துவப் பதிவேடு இந்தியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து அலோபதி (எம்.பி.பி.எஸ்) மருத்துவர்களுக்கான விரிவான மற்றும் மாறும் தரவுத்தளமாக இருக்கும் என்றார்.

தேசிய சுகாதார பதிவேடு என்பது, டிஜிட்டல் சுகாதார சூழலை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.   துணை மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களுக்கு இதேபோன்ற பதிவேட்டைத் தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் திரு ஜெ பி நட்டா குறிப்பிட்டார்.  

 நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், மிகப்பெரிய டிஜிட்டல் சுகாதார சூழலியலை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் டிஜிட்டல் பதிவேட்டை உருவாக்குவது இந்த அமைப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மற்றொரு இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் பேசுகையில், "சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்" என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் திசையில் தேசிய மருத்துவ பதிவேடு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2048222

***

MM/AG/DL


(Release ID: 2048250)