பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலங்கை சோசலிச குடியரசின் குடிமைப்பணி ஊழியர்களுக்கான திறமை மேம்பாட்டுத் திட்டம்: முசூரி நல்லாட்சி தேசிய மையத்தில் தொடக்கம்

Posted On: 23 AUG 2024 1:17PM by PIB Chennai

நல்லாட்சிக்கான தேசிய நிலையம் (NCGG) இலங்கையின் இடைநிலை குடிமைப்பணி ஊழியர்களுக்கான 5-வது திறமை மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த இரண்டு வாரத் திட்டம்  2024 ஆகஸ்ட் 19 முதல் 30 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன்மை உதவிச் செயலாளர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள இலங்கையைச் சேர்ந்த 39 இடைநிலை குடிமைப் பணி அதிகாரிகளுக்கு  இத்திட்டம் நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியின் மூன்றாம் நாளில், நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரான திரு வி. ஸ்ரீனிவாஸ், பங்கேற்று குடிமைப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இரண்டு வார நிகழ்ச்சியில், மாறிவரும் ஆளுகை, டிஜிட்டல் இந்தியா, சேவைக்கான உரிமை, எளிதான வாழ்க்கை, ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் நிலப் பதிவுகள் மேலாண்மை, ஆர்வமுள்ள மாவட்ட திட்டங்கள், 2030-க்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அணுகுமுறை, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய திட்டம் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய பரந்த அளவிலான அமர்வுகளை உள்ளடக்கியது.

இந்த மையம், இதுவரை இலங்கையைச் சேர்ந்த 174 மூத்த மற்றும் இடைநிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ம் ஆண்டில் நிறுவப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய மையம், இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிசியா, சீஷெல்ஸ், காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூட்டான், மியான்மர், எத்தியோப்பியா, எரித்திரியா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, மடகாஸ்கர், பிஜி, மொசாம்பிக் மற்றும் கம்போடியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்த மையம் வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளது.

----

(Release ID 2048030)

LKS/KPG/KR

 


(Release ID: 2048045) Visitor Counter : 36


Read this release in: English , Urdu , Hindi , Manipuri