தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

டெரா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் குறித்த பரிந்துரைகளை டிராய் வெளியிட்டது

Posted On: 21 AUG 2024 7:23PM by PIB Chennai

டெரா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் குறித்த பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது.  தொலைத் தொடர்புத் துறை, 08.12.2022 தேதியிட்ட கடிதத்தின் மூலம், டிராய் சட்டம், 1997 (திருத்தப்பட்டபடி) பிரிவு 11 (1) ஏ) இன் கீழ், 'டெரா ஹெர்ட்ஸ் வரம்பில் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு தேவை உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்படாத அல்லது வரையறுக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் பேண்டுகளை வெளிப்படையான மற்றும் உரிமம் ரத்து செய்யப்பட்ட பயன்பாடு' குறித்து பரிந்துரைகளை வழங்குமாறு ஆணையத்தை கேட்டுக்கொண்டது.

இது தொடர்பாக, ஆலோசனை அறிக்கையை ஆணையம் 27.09.2023 அன்று பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைப் பெறுவதற்காக வெளியிட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், 17 பங்குதாரர்கள் கருத்துக்களை வழங்கினர், மேலும் இரண்டு பங்குதாரர்கள் தங்கள் எதிர் கருத்துக்களை வழங்கினர். ஆலோசனை அறிக்கை மீதான விவாதம் 08.03.2024 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

ஆலோசனை செயல்பாட்டில் பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், அதன் சொந்த பகுப்பாய்வின் அடிப்படையிலும், டெரா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் குறித்த பரிந்துரைகளை டிராய் இறுதி செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

95 ஜிகாஹெர்ட்ஸ் முதல் 3 ஹெர்ட்ஸ் வரம்பில் 'டெரா ஹெர்ட்ஸ் பரிசோதனை அங்கீகாரம்'  என்று அழைக்கப்படும் ஸ்பெக்ட்ரத்திற்கான புதிய சோதனை அங்கீகாரத்தை அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் 116-123 ஜிகாஹெர்ட்ஸ், 174.8-182 ஜிகாஹெர்ட்ஸ், 185-190 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 244-246 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் பேண்டுகளில் அங்கீகாரம் மற்றும் ஒதுக்கீடு-விலக்கு செயல்பாடுகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் தானியங்கி ரேடார் அமைப்புகளின் அங்கீகாரம் மற்றும் ஒதுக்கீடு-விலக்கு நடவடிக்கைகளுக்கு 77-81 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் வரம்பு வழங்கப்பட வேண்டும்.

ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட டெரா ஹெர்ட்ஸ் பரிசோதனை அங்கீகாரம் (டி.ஹெச்.இ.ஏ), தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களை டெரா ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் புதுமையான புதிய தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் உருவாக்க ஊக்குவிக்கும். ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட புதிய சோதனை அங்கீகார முறை அமல்படுத்தப்பட்டவுடன், அரசின் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும்.

இந்தப் பரிந்துரைகள் டிராய் இணையதளத்தில் (www.trai.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் விளக்கம் / தகவலுக்கு டிராய் ஆலோசகர் (நெட்வொர்க்ஸ், ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமம்) திரு அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-20907758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047397

BR/KR

 

 

 

***

 



(Release ID: 2047489) Visitor Counter : 29