தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத் தொடர்புத் துறை அசல் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் 2-வது ஆலோசனைக் கூட்டம்- மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 21 AUG 2024 7:25PM by PIB Chennai

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி ஆகியோர் தொலைத் தொடர்புத் துறை பிரதிநிதிகள் ஆலோசனைக் குழுவுடனும் தொலைத் தொடர்புத் துறை அசல் உபகரண உற்பத்தியாளர்களுடனும் (OEM-ஒஇஎம்) இன்று இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வழிகள், சிறந்த அணுகுமுறையை பின்பற்றுதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் முந்தைய கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்தல் ஆகியவை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பிரதிநிதிகள் ஆலோசனைக் குழுவில் (SAC) தொழில்துறை பிரதிநிதிகள், வளர்ச்சி இலக்குகள் குறித்துப் பேசினா்.  உள்நாட்டு, சர்வதேச தொலைத் தொடர்புத் துறை வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து செயல்பட தொழில்துறை பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

ஓஇஎம்-களின் பிரதிநிதிகளின் கூட்டத்தில், அவர்கள் எழுப்பிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசு முழு கவனம் செலுத்தும் என அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு உறுதியளித்தார்.

தொலைத் தொடர்புத் துறை தொடர்பான பல்வேறு விஷயங்களில் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைச்சர் சிந்தியா ஆறு தனித்துவமான பிரதிநிதிகள் ஆலோசனைக் குழுக்களை (எஸ்ஏசி) அமைத்துள்ளார். தொலைத்தொடர்புத் துறை தொடர்பான விஷயங்களில் அரசுடன் நிலையான இருவழி உரையாடலை எளிதாக்குவதை வை நோக்கமாகக் கொண்டுள்ளன.

***

PLM/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2047407) வருகையாளர் எண்ணிக்கை : 89
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Hindi_MP