வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
திரு அமர்தீப் சிங் பாட்டியா தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளராக பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
21 AUG 2024 3:49PM by PIB Chennai
ஐஏஎஸ் அதிகாரி திரு அமர்தீப் சிங் பாட்டியா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளராக பொறுப்பேற்றார். இந்தப் பதவியை வகித்த திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்புத் துறையின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். இதற்கு முன்பு, அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றினார்.
திரு அமர்தீப் சிங் பாட்டியா நாகாலாந்து கேடரைச் சேர்ந்த 1993 பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். மத்திய அரசில், பெரு வணிக நிறுவன விவகாரங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகங்களில் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். மாநில அரசில், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுற்றுச்சூழல் மற்றும் வனம், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி மற்றும் உள்துறை ஆகிய துறைகளைக் கையாண்டுள்ளார்.
***
(Release ID: 2047289)
PKV/AG/KR
(रिलीज़ आईडी: 2047307)
आगंतुक पटल : 103