பிரதமர் அலுவலகம்
போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கான தமது பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
Posted On:
21 AUG 2024 9:07AM by PIB Chennai
போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கு இன்று நான் அரசு முறைப் பயணத்தை தொடங்குகிறேன்.
போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70-வது ஆண்டினைக் குறிப்பதாகும். மத்திய ஐரோப்பிய பகுதியின் பொருளாதாரத்தில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும். நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கு எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆந்ரீஸ் டூடா ஆகியோருடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். போலந்தில் உள்ள ஆர்வமிக்க இந்திய சமூகத்தினரையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.
போலந்திலிருந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு நான் பயணம் செய்ய இருக்கிறேன். உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதன் முறையாகும். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய உக்ரைன் மோதலுக்கு அமைதி தீர்வு காண கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான உரையாடல் வாய்ப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையில் இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த இரு நாடுகளுடனான விரிவான தொடர்புகளின் இயற்கையான தொடர்ச்சிக்கும் வரும் ஆண்டுகளில் மேலும் வலுவான, துடிப்புமிக்க உறவுகளுக்கு அடித்தளத்தை அமைக்கவும் இந்தப் பயணம் உதவும் என்று நான் நம்புகிறேன்.
***
(Release ID: 2047124)
SMB/RR/KR
(Release ID: 2047171)
Visitor Counter : 339
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam