கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இந்த ஆண்டுக்கான ரக்ஷாபந்தன் நிகழ்ச்சியை அமைச்சக ஊழியர்களுக்காக சிறப்பானதாக்கினார்
Posted On:
19 AUG 2024 6:10PM by PIB Chennai
'ரக்ஷா பந்தன்' பண்டிகையை முன்னிட்டு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், அலுவலகத்தில் இருந்த அனைத்து பெண் ஊழியர்களும் தமக்கு ராக்கி கட்டுமாறு அழைப்பு விடுத்தார்.
அமைச்சகத்தின் அலுவலர்களுடன், சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், அமைச்சகத்தில் பணிபுரியும் இளம் தொழிலாளர்கள் ஆகியோரும் அமைச்சருக்கு ராக்கி கட்டினார்கள்.
அனைவரும் ஒரே குடும்பமாக கொண்டாடும், இந்த சகோதர சகோதரியின் அழகான பிணைப்பை பகிர்ந்து கொள்வதில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் மகிழ்ச்சி தெரிவித்தார். திரு சோனாவாலுக்கு ராக்கியைக் கட்டிய ஊழியர்களில் ஒருவர், இது ஒரு அற்புதமான நிகழ்வு என்றும், இது அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்றும் கூறினார். மற்றொரு ஊழியர் கூறுகையில், தனது சொந்த சகோதரர் வெளிநாட்டில் இருப்பதால் அமைச்சருக்கு ராக்கி கட்டியது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தருணம் என்று கூறினார்.
திரு சர்பானந்த சோனாவால் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, ரக்ஷாபந்தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது ஒரு குடும்பமாக மாறுவதற்கும் செயல்படுவதற்கும் அமைச்சகத்திற்குள் உள்ள பிணைப்பை மேலும் பலப்படுத்துகிறது என்று திரு சோனாவால் கூறினார்.
***
IR/AG/DL
(Release ID: 2046741)
Visitor Counter : 51