குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
Posted On:
19 AUG 2024 6:00PM by PIB Chennai
இந்திய வெளியுறவுப் பணி (2023 பிரிவு) பயிற்சி அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 19, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
அப்போது உரையாற்றிய குடியரசுத் தலைவர், வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உள்நாட்டுக் கொள்கைகளின் விரிவாக்கம் என்று தெரிவித்தார். எனவே, நமது நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற திட்டத்துடன், உலகளாவிய செயல் நடவடிக்கையை வடிவமைப்பதும் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகள் இந்திய அரசின் பிரதிநிதிகள் மட்டுமல்ல, அவர்கள் 140 கோடி இந்தியர்களையும், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களையும் பிரதிநிதித் துவப்படுத்துகின்றனர் என்று கூறினார். அவை இந்தியாவின் பன்முக மற்றும் பன்முக கலாச்சாரத்தையும், நமது 5000 ஆண்டு பழமையான நாகரிகத்தின் செழுமையையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும், மேலும் அவர்கள் ஒரு சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஒரு சிறந்த தூதராக திகழ தனித்துவமான திறன்கள் தேவை என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், அவர்கள் திறமையான தகவல் தொடர்பாளராகவும், உத்திசார்ந்த சிந்தனையாளராகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்.
***
IR/AG/DL
(Release ID: 2046738)
Visitor Counter : 66