பாதுகாப்பு அமைச்சகம்

வளர்ச்சியடைந்த பாரதம்@2047-க்கான செயல்திட்டம் குறித்து இந்திய ராணுவத்தின் உயர் தலைவர்கள் விவாதித்தனர்

Posted On: 19 AUG 2024 5:41PM by PIB Chennai

இந்திய ராணுவத்தின் உயர் தலைவர்கள் 2024 ஆகஸ்ட் 19  அன்று புதுதில்லியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நடத்தினார்கள். ஜெனரல் திவேதி 2024 ஜூன் 30 அன்று ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர்  அவரது தலைமையின் கீழ் நடைபெறும் முதல் உயர்மட்டக் கூட்டம் இதுவாகும். ஆகஸ்ட் 20 வரை நடைபெறும்  இந்தக் கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் ஏழு கமாண்டுகளின் முதன்மை கமாண்டிங்  அதிகாரி கலந்து கொள்கிறார்.

அமிர்த காலத்தின் போது இந்திய இராணுவத்தின் எதிர்காலத் திட்டத்தை வகுப்பது, இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாகவும், ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய நாடாகவும், 2047-ம் ஆண்டளவில் வாழ்வதற்கு மிகவும் விரும்பத்தக்க நாடுகளில் ஒன்றாகவும் மாற்றுவதற்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்படுவது குறித்து இன்றைய விவாதத்தில் முக்கிய இடம் பெற்றது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய இராணுவத்தின் மாற்றத்திற்கான வழிவகையை அமைப்பதற்கும் ஒரு வாய்ப்பை  இக்கூட்டம் ஏற்படுத்தியது.

இந்திய ராணுவத்தின் தற்போதைய மாற்றத்தகுந்த முயற்சிகள் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம்@2047 நோக்கத்தை அடைவதில் அதன் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046687

***

IR/AG/DL



(Release ID: 2046730) Visitor Counter : 34