மத்திய பணியாளர் தேர்வாணையம்

'ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள்' (பிரிவு 'பி') வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வு, 2023-ன் எழுத்து தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அறிவித்துள்ளது

Posted On: 19 AUG 2024 2:59PM by PIB Chennai

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 டிசம்பர் மாதத்தில் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள் (பிரிவு 'பி') வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டி எழுத்துத் தேர்வு மற்றும் 2024 ஜூலை மாதத்தில்  நடத்தப்பட்ட பணி ஆவணங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில்,  2023 -ம் ஆண்டின் தேர்வுப் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிரிவு பி, இந்திய வெளியுறவுப் பணியைச் சேர்ந்த பொதுப்பிரிவின் பிரிவு அதிகாரியாக நியமிக்க விண்ணப்பதாரர்களை பரிந்துரைத்துள்ளது. காலியாக அறிவிக்கப்பட்ட 30 பணியிடங்களில் 29 பணியிடங்களை நிரப்ப பரிந்துரைத்துள்ளது. இதில் பொதுப்பிரிவினர் 26 பேர், ஷெட்யூல்டு வகுப்பினர் 2 பேர், பழங்குடியினர் ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.  

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எஸ்எல்பி எண் 31288/2017-ன் இறுதி முடிவுக்கு இந்த முடிவு மேலும் உட்பட்டது.

இந்த தேர்வு முடிவுகளை www.upsc.gov.in   என்ற யுபிஎஸ்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.  தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046574

***

IR/AG/KR



(Release ID: 2046620) Visitor Counter : 36