பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை கப்பல் தபார் 2 நாள் பயணமாக டென்மார்க் மாநிலம் எஸ்பிஜெர்க் சென்றடைந்தது

Posted On: 18 AUG 2024 6:49PM by PIB Chennai

இந்திய கடற்படை கப்பல் தபார் 2 நாள் பயணமாக டென்மார்க் மாநிலம் எஸ்பிஜெர்க் சென்றடைந்தது

புதுதில்லி, ஆகஸ்ட் 18, 2024

எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் தபார், கேப்டன் எம்.ஆர்.ஹரிஷ் தலைமையில்  இரண்டு நாள் பயணமாக டென்மார்க்கின் எஸ்ப்ஜெர்க் வந்தடைந்தது.

டென்மார்க்கின் எஸ்ப்ஜெர்க் நகருக்கு ஐ.என்.எஸ் தபார் மேற்கொண்டுள்ள பயணம், இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையே தற்போதுள்ள பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எஸ்ப்ஜெர்க் துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, கப்பலின் குழுவினர் கலாச்சார பரிமாற்றம் உட்பட டேனிஷ் ஆயுதப்படைகளுடன் பல்வேறு இருதரப்பு தொழில்முறை தொடர்புகளில் பங்கேற்பார்கள். உலகெங்கிலும் உள்ள கடற்படைகளுடன் கூட்டாண்மையை வளர்ப்பதில் இந்திய கடற்படை உறுதிபூண்டுள்ளது.

இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான தூதரக உறவுகள், வரலாற்று இணைப்புகள், பொதுவான ஜனநாயக மரபுகள், பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. செப்டம்பர் 28, 2020 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சன் இடையே நடைபெற்ற மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது இருதரப்பு உறவுகள் "பசுமை கேந்திர கூட்டாண்மை" நிலைக்கு உயர்த்தப்பட்டன.

.என்.எஸ் தபார் பல்துறை அளவிலான ஆயுதங்கள் மற்றும் சென்சார்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்திய கடற்படையின் ஆரம்பகால ஸ்டெல்த் போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.

***

(Release ID: 2046437)

BR/RR


(Release ID: 2046491) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP