விவசாயத்துறை அமைச்சகம்

முந்தைய அரசுகள் விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தவில்லை: திரு சிவ்ராஜ் சிங் செளகான்

Posted On: 15 AUG 2024 7:18PM by PIB Chennai

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர்கள் கொடியேற்றியுள்ளனர், ஆனால் இதற்கு முன்பு இருந்த எந்த அரசும் விவசாயிகளை சுதந்திர தின விழாவுக்கு அழைத்ததும் இல்லை, விவசாயிகளுக்கு முன்னுரிமையும் அளித்தது இல்லை  என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்  கூறியுள்ளார். ஆனால் தற்போது விவசாயிகளை சுதந்திர தின விழாவுக்கு அழைத்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு திரு சௌகான் நன்றி தெரிவித்து கொண்டார்.

சுதந்திர தின விழா மற்றும் தேசிய பூச்சி கண்காணிப்பு சாதன அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்ட விவசாயிகளிடையே உரையாற்றிய திரு சௌகான், சுதந்திரம் என்பது நமக்கு வெள்ளித் தட்டில் வைத்து கொடுக்கப்பட்டதல்ல என்பதை அனைவரும் அறிவோம் என்றார். ஆயிரக்கணக்கான தியாகிகள் புன்னகையுடன் தூக்கு  கயிற்றை முத்தமிட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் மனதில் உறுதிப்பாட்டுடன் இருந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர், இந்திய தாய்க்கு பயன்படும் விதமாக அவர்கள் அனைவரும் மீண்டும் இந்த பூமியில் பிறக்க வேண்டும் என்றும் கூறினார்.

தற்போது இந்த நாட்டிற்காக இனியாரும் உயிரிழக்கத் தேவையில்லை, மாறாக அனைவரும் வாழ வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதை திரு சௌகான் சுட்டிக்காட்டினார்.  விவசாயிகள் தான் நாட்டின் இதயத் துடிப்பு, மக்களின் இதயத் துடிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.  விவசாயிகள் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதால் தான் அனைவரது இதயமும் துடித்து கொண்டிருப்பதாகவும், விவசாயிகள் நமக்கு கடவுளைப் போன்றவர்கள் என்றும் திரு சௌகான் தெரிவித்தார்.  நமக்கு அன்னமிடுவோரை மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வைத்திருக்க வேண்டியது நமது கடமை என்றும் அவர் கூறினார். திரு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல், அவரது ஒவ்வொரு உரையிலும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தி வருவதாகவும் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் கூறினார்.

***

(Release ID: 2045713)

MM/AG/RR



(Release ID: 2045913) Visitor Counter : 17