ஜல்சக்தி அமைச்சகம்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டில் அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் 'இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கத்தை' கொண்டாடினார்
प्रविष्टि तिथि:
14 AUG 2024 5:05PM by PIB Chennai
'இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கம்' என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் கீழ், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், புதுதில்லியில் இன்று அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடினார். அனைத்து அதிகாரிகளும் / ஊழியர்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதற்காக அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஊக்குவித்து, https://harghartiranga.com இணையதளத்தில் தேசியக் கொடியுடன் தங்கள் செல்ஃபிக்களைப் பதிவேற்றுங்கள் என்று கூறினார்.
தேசிய நிகழ்வை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்கான அடையாளமாக, நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் சில அதிகாரிகள் / ஊழியர்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினார்.
இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் நோக்கம், தேசியக் கொடியை வீட்டில் ஏற்றவும்,, இந்தியாவின் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் அதை ஏற்றவும் மக்களை ஊக்குவிப்பதாகும். தேசபக்தி உணர்வை ஊக்குவிப்பதும், மூவர்ணக் கொடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முயற்சியாகும்.
***
IR/RR/DL
(रिलीज़ आईडी: 2045338)
आगंतुक पटल : 126