பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் மின்னணு ஆளுமை குறித்த 27-வது தேசிய மாநாடு செப்டம்பரில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 14 AUG 2024 3:47PM by PIB Chennai

மின்னணு ஆளுமை குறித்த 27வது தேசிய மாநாடு மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில், 2024 செப்டம்பர் 3, 4 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் மகாராஷ்டிரா அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

"வளர்ச்சியடைந்த பாரதம்: பாதுகாப்பான மற்றும் நிலையான மின்னணு-சேவை வழங்கல்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாடு, புதுமையான மின்னணு-ஆளுமை நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கவும் ஊக்குவிக்கவும், அரசு, கல்வியாளர்கள், விருது பெற்றவர்கள் மற்றும் தொழில்துறையின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைத்து, ஆறு முழுமையான அமர்வுகள் மற்றும் ஆறு பகுதி அமர்வுகளைக் கொண்டிருக்கும்.

தொடக்க அமர்வில் மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விருதுகளை வழங்குவார். இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்கள் விவாதங்கள் நடைபெறும்.

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நிறைவு விழாவில் சிறப்புரையாற்றுவார்கள்.

***

IR/RR/KV


(रिलीज़ आईडी: 2045263) आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi