தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பரிமாற்றம் உறுப்பினரை ஓய்வூதியத்திற்கு தகுதியாக்குகிறது
Posted On:
13 AUG 2024 6:33PM by PIB Chennai
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 13-08-2024 அன்று "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பரிமாற்றம்" என்ற தலைப்பில் 5-வது நேரடி உரையாடல் அமர்வை நடத்தியது. இந்த நேரடி அமர்வு முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் 25,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பரிமாற்றத்தின் பல்வேறு அம்சங்களை இபிஎஃப்ஓ தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த நிபுணர் திரு சனத் குமார் விவரித்தார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய அவர், வெவ்வேறு வருங்கால வைப்பு நிதி கணக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் உறுப்பினர்கள் வெவ்வேறு முன்பணங்கள் / பகுதியளவு திரும்பப் பெறுதல்களுக்கு தகுதி பெறுவார்கள் என்றும், டிடிஎஸ் மற்றும் ஓய்வூதியப் பலன்களைத் தவிர்க்கலாம் என்றும் கூறினார். விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கை மாற்றுவதற்கான செயல்முறைகளை அவர் விளக்கினார்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிவு செய்யப்பட்ட நேரடி அமர்வை இப்போது YouTube-ல் காணலாம் (https://www.youtube.com/watch?v=CqBIJ6LQa8c). பொது மக்கள் உட்பட உறுப்பினர்கள் இந்த அமர்வு மற்றும் முந்தைய நேரடி அமர்வுகளை காணலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் நன்மைகள், சேவைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நேரடி அமர்வுகள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமையும் நடத்தப்படுகின்றன. முதல் அமர்வு 2024 மே 14 அன்று நடைபெற்றது. அடுத்த நேரடி அமர்வு 2024 செப்டம்பர் 10 அன்று நடைபெறும். விவாதத்தின் தலைப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சமூக ஊடக தளத்தில் 2024 செப்டம்பர் 3 அன்று முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
***
IR/RR/KV
(Release ID: 2045203)
Visitor Counter : 65