பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரின் கத்துவா நகரில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் மூவண்ணக்கொடிப் பேரணி
Posted On:
13 AUG 2024 7:12PM by PIB Chennai
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் வீடுகள் தோறும் மூவண்ணக் கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரின் கத்துவா நகரில் நடைபெற்ற மூவண்ணக்கொடி பேரணிக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு உள்ளூர் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
பேரணி நிறைவுக்குப் பின், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் உருவச்சிலைக்கு அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மலரஞ்சலி செலுத்தினார். தூய்மை இயக்கத்தின் பகுதியாக தூய்மைப் பணியிலும் அமைச்சர் ஈடுபட்டார். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் ஒருங்கிணைந்த இந்தியா என்ற டாக்டர் முகர்ஜின் கனவை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார் என்று அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு சட்டம் என்ற தொலைநோக்குப் பார்வையையும் அவர் நனவாக்கி இருப்பதாக கூறினார்.
கத்துவா நகரம் புனித பூமி என்றும் இந்த இடத்தில் இருந்து தான் டாக்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டு ஸ்ரீநகருக்கு அழைத்து செல்லுப்படும் வழியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்றும் குறிப்பிட்ட மத்திய அமைச்சர், இந்தக் காரணத்துக்காகவே டாக்டர் முகர்ஜிக்கு கத்துவாவில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.
பின்னர் சுமார் 2 மணி நேரம் பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், அவர்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மூத்த அதிகாரிகள் மூலம் விரைந்து தீர்வு ஏற்பட உதவி செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2044965
***
SMB/AG/DL
(Release ID: 2044993)
Visitor Counter : 42