விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், நியூசிலாந்து அமைச்சர் திரு டோட் மெக்லே இடையேயான உயர்மட்ட இருதரப்பு பேச்சுக்கள்

Posted On: 12 AUG 2024 6:14PM by PIB Chennai

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், நியூசிலாந்தின் வேளாண்மை, வனம், வர்த்தகம் மற்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திரு. டோட் மெக்லே மற்றும் அவரது குழுவினரை, தமது குழுவினருடன் புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு கூட்டத்தில் சந்தித்தார்.

 

பரஸ்பர ஆர்வம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளின் முக்கிய துறைகளில் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளின் வேளாண் முன்னுரிமைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தோட்டக்கலை தொடர்பான உத்தேச ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட கூட்டாண்மைக்கான புதிய வழிகளை கண்டறிவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ள விவசாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அமைச்சர்கள் வெளிப்படுத்தினர்.

 

இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் நியூசிலாந்தின் தீவிர முயற்சிகளுக்கு அமைச்சர் திரு சவுகான் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், இந்த உறவில் நியூசிலாந்து அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் ஒப்புக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று, வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை எடுத்துரைத்த அவர், நியூசிலாந்தில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் கல்வி பரிமாற்றங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்திய மாதுளை இறக்குமதிக்கும், மாம்பழ ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் நியூசிலாந்து தரப்பு ஒப்புக்கொண்டது.

இந்த கூட்டத்தில் இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் திரு பேட்ரிக் ராடா மற்றும் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044632

 

***

IR/RS/DL




(Release ID: 2044659) Visitor Counter : 35