பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

"தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது" என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Posted On: 11 AUG 2024 4:54PM by PIB Chennai

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் செனானியில் (உதம்பூர்) இன்று பொது தர்பாரை நடத்தினார். மகளிர் சுய உதவிக் குழுக்கள்  மற்றும் ஸ்டார்ட் அப்களுடன் கலந்துரையாடினார். டெலிமெடிசின் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் "டாக்டர் ஆன் வீல்ஸ்" சேவையையும் தொடங்கி வைத்தார்.

"தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்  - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு  அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது" என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று புதுதில்லியில் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் செனானி தாலுகாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற என்.ஆர்.எல்.எம் குறித்த கண்காட்சியில் அவர் பேசினார்.

இந்த இயக்கத்தின் மூலம் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்களாகவே தற்சார்பாக மாறியுள்ளன என்றும், மற்ற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார். "லட்சாதிபதி சகோதரிகள் – சுய உதவிக் குழு சகோதரிகள் , நிலையான வருமானத்தை ஈட்டி, சமூகத்தில் முன்மாதிரியாக மாறியுள்ளனர், இது கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைக்கும்" என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தீன்தயாள் அந்தியோதயா திட்டம்  – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய முயற்சி என்று டாக்டர் சிங் கூறினார்.

உதம்பூர்-கதுவா-தோடா மக்களவைத் தொகுதியின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், தொலைதூரப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்தவும், பயண நேரத்தைக் குறைக்கவும் பி.எம்.ஜி.எஸ்.ஒய் மற்றும் நெடுஞ்சாலைகளின் கீழ் சாலைகள் விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்றார். "லகன்பூர்-பானி-பசோஹ்லி-தோடாவிலிருந்து புதிய தேசிய நெடுஞ்சாலை நிறைவடையும் போது, இணைப்பை மேம்படுத்தி, பயணத்தை எளிதாக்கும்" என்று டாக்டர் சிங் கூறினார். இதேபோல், செனானி-சுத்மகாதேவ்-கெல்லானி-சத்ரு-கன்னாபால் ஆகியவற்றை இணைக்கும் கோஹா-கெல்லானி-கன்னாபால் தேசிய நெடுஞ்சாலை தரைவழி போக்குவரத்துக்கு மாற்று பாதையை வழங்கும் என்று அவர் கூறினார்.

"கிராமப்புற நிலப்பரப்பை மாற்றியமைக்க கடந்த பத்து ஆண்டுகளில் கிடைத்த ஆதாயங்களை ஒருங்கிணைப்பதில் மோடி அரசு கவனம் செலுத்துகிறது" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் 'ஆரோக்யா-டாக்டர் ஆன் வீல்ஸ்' ஆம்புலன்ஸ் மொபைல் டெலிமெடிசின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இலவச டெலிமெடிசின் ஸ்டார்ட்அப் முன்முயற்சி தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் இலவசமாக சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். மொபைல் ஆம்புலன்ஸின் செயல்பாட்டை விளக்கிய அமைச்சர், "நோயாளி பரிசோதனை மற்றும் ஒரு மருந்து வழங்குவதற்கான முழு பயிற்சியும் சுமார் 45 நிமிடங்களில் நிறைவேற்றப்படுகிறது, இது சாதாரண நடவடிக்கையில், நோயாளியை மருத்துவமனையில் உடல் ரீதியாக பரிசோதிக்க வேண்டியிருந்தால் நாட்கள் ஆகலாம்" என்றார். ஒரு நோயாளி இப்போது தனது மருத்துவ பிரச்சினையை தனது சொந்த மொழியின் மூலம் விவரிக்க முடியும், மேலும் நடமாடும் மருத்துவர் அதே மொழியில் நோயாளிக்கு பதிலளிக்கிறார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த புதுமையான முயற்சியை ஒரு சுகாதார ஸ்டார்ட் அப் என்றும், இது பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் விவரித்தார். இது தொடர்பாக, இந்தப் பரிசோதனையின் மேலும் வளர்ச்சி மற்றும் நிலைத்திருக்க அதிக சிஎஸ்ஆர் பங்களிப்புகளை டாக்டர் சிங் வலியுறுத்தினார், இதனால் அதிகமான மக்கள் இதன் மூலம் பயனடைகிறார்கள்.

பின்னர், டாக்டர் ஜிதேந்திர சிங் ஒரு பொது தர்பாரை நடத்தினார், இதன் போது ஏராளமான மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். அவற்றை விரைவாக தீர்க்கக் கோரி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பல குறைகள் அந்த இடத்திலேயே நிவர்த்தி செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை விரைந்து கவனிக்குமாறு மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், அதனால்தான் கடந்த சில வாரங்களாக இதுபோன்ற பொது தர்பார்களில் குடிமக்களை சந்தித்து அவற்றை விரைவாக நிவர்த்தி செய்து தீர்வு காண்பதை உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் பல்வேறு துறைகளின் பல்வேறு அரங்குகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார். இந்திய அரசின் அன்னை பெயரில் ஒரு மரம் முயற்சியின் ஒரு பகுதியாக  அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டாக்டர் சிங் ஒரு மரக்கன்றையும் நட்டார்.

****

PKV/DL



(Release ID: 2044308) Visitor Counter : 38