விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் ஆகஸ்ட் 11-ம் தேதி, 109 விதை வகைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிடுகிறார்: மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்

Posted On: 10 AUG 2024 6:43PM by PIB Chennai

நாளை  (2024 ஆகஸ்ட் 11) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 109 விதை வகைகளை வெளியிட இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

போபாலில் இன்று (10.08.2024) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது என்றும், விவசாயிகள் அதன் ஆன்மா என்றும் கூறினார். விவசாயத் துறை சுமார் 50% பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என அவர் தெரிவித்தார்.

1 - உற்பத்தியை அதிகரித்தல்

2 - உற்பத்தி செலவைக் குறைத்தல்

3 - வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்குதல்

4 - இயற்கை பேரிடர் இழப்புக்கு இழப்பீடு 5 - பாரம்பரிய பயிர்கள், பழங்கள், மலர்கள், மருத்துவம், தேனீ வளர்ப்பு, மதிப்புக் கூட்டுதல், மூலப்பொருட்களிலிருந்து மாறுபட்ட பொருட்களை தயாரித்தல்

6 - இயற்கை விவசாயம் ஆகிய 6 பரிமாணங்களில் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என அவர் தெரிவித்தார்.

உற்பத்தியை அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும் விரும்பினால், நமக்கு நல்ல விதைகள் தேவை என்று அமைச்சர் கூறினார். பருவநிலை மாற்றம் காரணமாக, பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என அவர் குறப்பிட்டார். தட்பவெப்ப நிலைக்கு உகந்த, சரியான மகசூல் தரக்கூடிய, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கும் விதைகள் நமக்குத் தேவை என்று அவர் கூறினார். விதைகளை உற்பத்தி செய்வது, ஆராய்ச்சி செய்வதன் மூலம் விதைகளை உருவாக்குவது போன்ற பணிகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். சமீபத்தில் 109 வகையான விதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். 23 வகையான தானியங்களின் விதைகள், 9 அரிசி விதைகள், 2 கோதுமை விதைகள் கோதுமை 2, 40 தோட்டக்கலை வகைகள் போன்றவை இதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த 109 பயிர் விதை வகைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2024 ஆகஸ்ட் 11) வெளியிடுவார் என்று திரு சௌகான் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுமார் 27 ஆயிரம் கோடியாக இருந்த வேளாண் பட்ஜெட், தற்போது அது தொடர்பான துறைகளையும் சேர்த்து ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வேளாண் - விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.

****

PLM/DL


(Release ID: 2044156) Visitor Counter : 89